முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லசந்த விக்ரமசேகரவின் இறுதி சடங்குகள் : அரசியல்வாதிகள் பலர் அஞ்சலி

படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணிக்கு உடல் வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மிதிகமவில் உள்ள குடும்ப மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த புதன்கிழமை தனது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இருப்பினும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், சந்தேகநபர்கள் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்ரமசேகரவின் இறுதி சடங்குகள் : அரசியல்வாதிகள் பலர் அஞ்சலி | Waligama Pradesa Sabha Chairman Shooting

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தொடர்பில் வெளியான தகவல்

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மற்றும் கொலைக்கு உதவிய மற்றொரு நபர் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி கித்சிறி ஜெயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் சி.சி.டி.வி மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் கொலை தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

சிசிடிவி காட்சிகளின்படி மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் தெளிவாகத் தெரியாததால், அவற்றின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை இன்னும் கண்டறிய முடியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

லசந்த விக்ரமசேகரவின் இறுதி சடங்குகள் : அரசியல்வாதிகள் பலர் அஞ்சலி | Waligama Pradesa Sabha Chairman Shooting

அரசியல்வாதிகள் அஞ்சலி

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தென் மாகாணத்தில் மறைந்திருப்பதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதன் காரணமாக, நேற்று முழுவதும் தென் மாகாணம் முழுவதும் பொலிஸாரின் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில், உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.