முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொது போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

பயணிகளின் பொது போக்குவரத்து வாகனங்களில் தேவையற்ற பொருட்களை பொருத்த அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து உட்பட வாகனங்களில் நிறுவப்பட்ட சாதனங்களை அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடம், தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளான தனியார் பேருந்தை, நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் தமிந்த சேனாநாயக்க இன்று பார்வையிட்ட பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வாகன பரிசோதகர்

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் பாதுகாப்பில் உள்ள விபத்திற்குள்ளான பேருந்தை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் பார்வையிட்டார்.

பொது போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை | Warning For Extra Items In Buses In Sri Lanka

இந்தச் சோதனையில் ஓடும் பேருந்தின் கதவு பூட்டு நிரந்தரமானதாக இல்லை எனவும் அது தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்தது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கதவைத் தற்காலிகமாக மூடும் முறை கடைப்பிடிக்கப்பட்டமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

ஓட்டுனர் சீட் பெல்ட் அணிய வில்லை எனவும், பேருந்தில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய பல வெள்ளை இரும்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் 3 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் பலத்த காயம் அடைந்ததாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்.

பொது போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை | Warning For Extra Items In Buses In Sri Lanka

மேலும், பேருந்தின் இருக்கைகள் தரமான முறையில் அமைக்கப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று விழுந்து ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த காயம் அடைந்ததாக ஆய்வாளர் தெரிவித்தார்.

தகுதியற்ற பேருந்தை இயக்கியமை தொடர்பில் பேருந்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்