கனடாவின் ரொறன்ரோ(Toronto) பிராந்தியத்தில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் கடும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், சில பகுதிகளில் சுமார் 10cm வரையிலான பனிப்பொழிவு ஏற்படும் என கனேடிய வளிமண்டலவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்களிலும் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடும் பனிப்பொழிவு
இதேவேளை, சில இடங்களில் 10cm முதல் 20cm வரையிலான பனிப்பொழிவும் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் ஏற்படும் எனவும் சில இடங்களில் சாரதிகளால் வீதியை பார்க்க முடியாத அளவிற்கு பனிப்பொழிவு நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வாகனம் செலுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.