பேரிடருக்குப் பிந்தைய நிவாரண செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்களின் ஆதரவுடன், அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பொறிமுறையின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது.
அதனை பொதுமக்களுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறியப்படுத்த விரும்புகிறது.
மக்களுக்கு எச்சரிக்கை
அண்மையில் தாக்கிய டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக்கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரும் பல குறுஞ்செய்திகள் WhatsApp, Facebook மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இவ்வாறான மோசடிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறும் அன்புடன் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், நாடு முழுவதுக்கும் சவாலான இந்தக் காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடுக்க, இத்தகைய செயல்களிலும் மோசடிகளிலும் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அமைச்சு வலியுறுத்துகிறது.

