லெபனானில்(Lebanon )உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவும் எச்சரிக்கையாக இருக்கவும்
வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் போன்ற சூழ்நிலை காரணமாக குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானின் இலங்கை தூதரகம்
இதன்படி, லெபனானில் உள்ள இலங்கையர்கள், நெரிசலான இடங்களுக்குச் செல்வது,
இரவில் வெளியே செல்வது, விழாக்களில் பங்கேற்பது மற்றும் நீண்ட தூரப் பயணங்களை
மேற்கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு, லெபனானின் இலங்கை தூதரகம்,
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது தங்களின் லெபனான் அடையாள அட்டை
அல்லது கடவுச் சீட்டு நகலை தம்முடன் வைத்திருக்குமாறு தூதரகம்
வலியுறுத்தியுள்ளது.