முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க!

வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்தியநிலையத்தை
வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று பார்வையிட்டார். 

கடந்த 8வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை
முதலிட்டு அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமல்
உள்ளது.

இந்நிலையில் அதனை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதுடன் அதற்கான முன் ஆயத்த பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். 

திருத்தப்பணிகள்  

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், பல மில்லியன் ரூபாய் பணம் இந்த பொருளாதார மத்திய நிலையத்தில்
செலவிடப்பட்டுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய
திருத்தப்பணிகளை செய்து விட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனை
திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க! | Wasantha Samarasinghe Visited Vavuniya

அத்துடன், ஏற்கனவே வவுனியா மொத்த வியாபார
சந்தையில் உள்ள 35 வியாபாரிகளுக்கு மத்திய நிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை
அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புக்களுக்கு
வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

மேலும்,மன்னாரில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு
மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி
மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். அந்த
திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளனவா என்பது தொடர்பாக ஆராயவேண்டும்.

பிழையான தகவல்கள்

மக்களுக்கு அபிவிருத்தி பணிகளையும் செய்ய வேண்டிய தேவை உள்ளது. நாட்டில்
மின்சாரம் தொடர்பாக பல பிரச்சினைகள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க! | Wasantha Samarasinghe Visited Vavuniya

எனவே
மக்களின் எதிர்ப்பினையும் கருத்தில் எடுத்து அந்த திட்டம் தொடர்பான முடிவு
அறிவிக்கப்படும்.

சுப்ரீம்செற் செயற்கைகோள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் பிரச்சினையை ஏற்ப்படுத்த
சிலர் முனைகின்றார்கள்.

அப்படி எவராலும் செய்ய முடியாது.
உத்தியோகத்தர்கள் வழங்கிய பிழையான தகவல்களின் அடிப்படையிலேயே பிரதமர் அந்த
விடயத்தை கூறியிருந்தார்.

பிழையான தகவல்களை வழங்கியவர்களே இதற்கான பொறுப்பை
ஏற்க வேண்டும். அதனை சரிசெய்ய வேண்டியது எமது பொறுப்பு. அதனாலேயே நான் அவ்வாறு
கூறியிருந்தேன். அத்துடன் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்ப்படுத்துவது தொடர்பாக
அரசாங்கத்திற்குள் எந்தவிதமான பேச்சும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.