தேசிய நீர் வழங்கல் மற்றும்
வடிகாலமைப்புச் சபையானது நாளைய நீர்வெட்டு குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதனடிப்படையில், நாளை (06) முற்பகல் 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை ஒன்பது மணி
நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கொழும்பு (Colombo) உட்பட பல பகுதிகளை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[UO94SEQ
]
பல பகுதி
அத்தோடு, கொழும்பு 01 முதல்
கொழும்பு 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் நீர்த் தடை ஏற்படும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பின் புறநகர் பகுதிகளிலும், நீர் விநியோகத்தடை நடைமுறையில்
இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
அறிவித்துள்ளது.
இதன்படி பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டே, ராஜகிரிய,
மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, கொட்டிகாவத்த, அங்கொட,
வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை,
ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களிலும் நீர் விநியோகத்தடை நடைமுறையில்
இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

