நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக சிலரின் வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரின் அழுத்தம் குறைந்து வருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வறட்சியான வானிலை
இதனால் நீர்ப்பம்பி ஊடாக நீர் தாங்கிகளுக்கு நிரப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளதால் சிலரின் வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிலவும் வறட்சியான வானிலையினால் மக்கள் மத்தியில் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.