மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வுப் பணி, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று(09.09.2025) தொடங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் இடம்பெற்ற இந்த அகழ்வுப் பணியில் நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள்
இதனைத் தொடர்ந்து, மேலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







