இலங்கையில் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை கூட்டு ஆடைகள் சங்க
மன்றம் வரவேற்றுள்ளது.
எனினும், எளிமைப்படுத்தப்பட்ட வெற் வரி(simplified value-added tax)முன்கூட்டியே
நீக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அந்த மன்றம் தமது கவலையை
வெளிப்படுத்தியுள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட vat வரி என்பது, ஆடைத் துறையின் போட்டித்தன்மையைப்
பேணுவதற்கும் முதலீட்டாளர் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மிக
முக்கியமானது.
பணப்புழக்க பாதுகாப்பு
இந்தநிலையில், சரியான நேரத்தில் vat பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும்
தாமதங்களைத் தடுப்பதற்கான ஒரு வலுவான வழிமுறை ஏற்றுமதியாளர்களுக்கு
பணப்புழக்கத்தைப் பாதுகாப்பதற்கும் முக்கியமாகும்.
எனவே, தடையற்ற வெற் மாற்றத்தை உறுதி செய்வதற்காக தொழில்துறை பங்குதாரர்களுடன்
நெருக்கமாக பணியாற்றுமாறு, கூட்டு ஆடைகள் சங்க மன்றம், அரசாங்கத்தைக் கேட்டுக்
கொண்டுள்ளது.
அத்துடன், வரி நிர்வாகம் குறித்த தெளிவு, வர்த்தக வசதி நடவடிக்கைகளை சரியான
நேரத்தில் செயல்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மையில் தொடர்ந்து
கவனம் செலுத்துதல் ஆகியவை லட்சிய ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்கு மிக
முக்கியமானதாக இருக்கும் என்றும் மன்றம் குறிப்பிட்டுள்ளது.