யாழ்ப்பாணத்தில் (Jaffna) 15 அடி நீளமுள்ள திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
யாழ் – புங்குடுதீவு கடலில் இன்று (09) குறித்த திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது.
இதன்படி, காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை காவல் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு
கடற்கரையில் இறந்த நிலையில் இந்த திமிங்கிலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள்
குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

