உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று (12) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
WHO தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 78வது அமர்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காக அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்
WHO ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு நாளை (13) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும்.
ஏனைய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கெப்ரேயஸ், தோஹாவிலிருந்து காலை 9.40 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் QR 660 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வறையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சக செயலாளர் அனில் ஜயசிங்க அவரை வரவேற்றுள்ளார்.

