முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் வயல்வெளிக்கு தீ மூட்டிய விசமிகள்

யாழ்ப்பாணம் மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில்
காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி
எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை அடுத்து துரித
நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் குறித்த
பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருடாவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் 

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் சென்று தீப்பரவலை கட்டுப்படுத்தும் துறைசார் அதிகாரிகளுடன்
இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் வயல்வெளிக்கு தீ மூட்டிய விசமிகள் | Who Set Fire To The Fields In Velanai Jaffna

வீசும் கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விடு எரிந்த தீயை தீயணைப்பு
படையினர் பலமணி நேரம் போராடியே கட்டுப்படுத்தினர்.

இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச்
சந்தி வரையான பல கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு
வருடாவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர் கதையாகி வருகின்றது.

இந்நிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது
நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள்
திணறி வருகின்றனர்.

வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில்

மேலும், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளிநாட்டுப்
பறவைகள் அதிகளவில் வருகை தருவதும் வழமை.

இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

யாழில் வயல்வெளிக்கு தீ மூட்டிய விசமிகள் | Who Set Fire To The Fields In Velanai Jaffna

தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை
உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும்
அதனால் கட்டாக்காலி தொல்லை என பிரச்சினைகள் உருவாகி மக்களுக்கும்
அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.