முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றிடமான எம்.பி பதவி யாருக்கு? முஸ்லிம் காங்கிரஸ் திட்டவட்டம்

இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வாகு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீமின் பதவி விலகல் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

இந்த வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கும்வழங்கப்பட மாட்டாது.

வெற்றிடமான எம்.பி பதவி யாருக்கு? முஸ்லிம் காங்கிரஸ் திட்டவட்டம் | Who Will Fill The Vacant Mp Position

மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தங்களது பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமது சபைகளை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும்.

அதற்கான சகல எற்பாடுகளையும் செய்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் ஒரு வருடத்திற்கென்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படும். அதனை கட்சி தீர்மானித்துள்ளது.

உறுப்பினர் பதவி

அந்த வகையில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தங்களது சபைகளை வெல்ல வைத்தால் கட்சி உங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத்தந்து உங்களையும், உங்களது பிரதேசத்தையும் கௌரவப்படுத்தும்.

வெற்றிடமான எம்.பி பதவி யாருக்கு? முஸ்லிம் காங்கிரஸ் திட்டவட்டம் | Who Will Fill The Vacant Mp Position

கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றியது சம்பந்தமாக, முன்னுதாரணமாக இருந்தது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் அக்கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நாலு மாதங்களுக்குள் விலகியமை வரலாற்றில் இது முதல் தடவையாகும்.

இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழச்சியும் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.