முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில்

தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எதனால் செய்து கொள்ளப்பட்டது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wic) தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார்.

போர் நிறுத்தம்

அப்போது பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால், நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவு காரணமாகவே போர் நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல நேரிட்டது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிற்கான நினைவுப் பேருரையில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வின் பிரதான சொற்பொழிவாளராக பங்கேற்று இருந்தார்.

குறித்த காலப்பகுதியில் கடுமையான அரசியல் நெருக்கடி நிலையை எதிர் நோக்க நேரிட்டது என ரணில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தாம் இரண்டாவது தடவையாக 2001 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்று கொண்டதன் பின்னர் இலங்கை கடும் அரசியல் நெருக்கடியை எதிர் நோக்கியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்திற்கு பின்வாங்க நேரிட்டது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக பல்வேறு இடங்களை இழக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கு பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதுடன், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர் நோக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று வழி இன்றி பொருளாதார நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் தம் உடனடியாக புதுடெல்லி நோக்கி பயணமானதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது சொற்பொழிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.