உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடக்கும் எனவும் தான் வெற்றி பெறுவதும் உறுதி எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்பதுடன் அதில் வெற்றி
பெறுவதும் உறுதி.
அவ்வாறு வெற்றி பெற்ற பின்னர் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட
வழக்குகள் எல்லாம் அரசமைப்பின் பிரகாரம் வலுவற்றதாகிவிடும். இதனால் கட்சித்
தலைமைத்துவம் தொடர்பிலும் பிரச்சினை எழாது.
ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். அரசமைப்புடன்
விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அது தொடர்பில் அச்சம் கொள்ள
வேண்டியதில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.