முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்னும் 10 ஆண்டுகளில் தேவைப்படாத மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் : உலகின் பிரபலம் அளித்த அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவையில்லை என்றும், அதனை ஏஐ தொழில்நுட்பமே(AI Technology) கவனித்துக் கொள்ளும் என்று மைக்ரோ சொப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ்(bill gates) தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 ஏஐ தொழில்நுட்பம் மூலம் மருத்துவ ஆலோசனை, சிறந்த கல்வி

எதிர்காலத்தில் சிறந்த மருத்துவ ஆலோசனையும், சிறந்த கல்வியும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இலவசமாக அல்லது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் 10 ஆண்டுகளில் தேவைப்படாத மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் : உலகின் பிரபலம் அளித்த அதிர்ச்சி தகவல் | Will Replace Doctors And Teachers By 2035

அதேபோல், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்றும் கூறினார். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் சிறந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் வகையில் மேம்படும் என்று அவர் நம்பிகன்கை தெரிவித்துள்ளார். 

அத்துடன், ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்த கல்வி இலவசமாக கிடைக்கும் என்றும், அவர் தனது நம்பிக்கையை பதிவு செய்தார்.

பல துறைகளில் மிகப்பெரிய பாதிப்புகள்

அதே நேரத்தில், தொழிற்சாலைகள், கட்டிட வேலை, ஹோட்டல் துறை, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்றும், வேலை இழப்பு வந்தாலும் வறுமை ஏற்படாது என்றும் பில் கேட்ஸ் கூறினார்.

இன்னும் 10 ஆண்டுகளில் தேவைப்படாத மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் : உலகின் பிரபலம் அளித்த அதிர்ச்சி தகவல் | Will Replace Doctors And Teachers By 2035

குறைந்த நேர வேலை மற்றும் அதிக சம்பளம், மன நிம்மதி, அதிக ஓய்வு கிடைக்கும் என்றும், மனித குலத்துக்கு ஏஐ ஒரு வரப்பிரசாதமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அனைத்து வேலைகளையும் மாற்றிவிட முடியாது என்றும், மனோதத்துவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட சில தொழில்களை மாற்ற முடியாது என்றும் பில் கேட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்