பொதுமக்களிடமிருந்து ரூ.4.5 மில்லியன் நிதி மோசடி செய்ததாகத் தேடப்பட்டு வந்த 31 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றையதினம் ஹட்டனில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றம் சந்தேகநபரான பெண்ணை கைது செய்வதற்காக பிடியாணை ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது.
மேலதிக விசாரணை
அதன்படி, ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகில் பதுளையைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் வழங்குவதாக விளம்பரப்படுத்தி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.