முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் பயங்கரம் – வீடொன்றில் குடும்பப் பெண் அடித்து கொடூரமாக கொலை

அம்பாறை (Amparai) – பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம்
பெரிய நீலாவணை காவல்துறையினரினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணை

இரு
பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில்
காயங்கள் ஏற்பட கூடிய வகையில் அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை
செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து
தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கரம் - வீடொன்றில் குடும்பப் பெண் அடித்து கொடூரமாக கொலை | Woman Beaten To Death In Ampara

மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில்
நிமிர்த்தம் தங்கியுள்ளதாகவும் சம்பவம் நடைபெற்ற வீட்டில்
பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR)
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் அவரது வீட்டில் அடித்து படுகொலை செய்யப்பட்டமை
தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார்
சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்திருந்தார்.

பிரேத பரிசோதனை

இந்த கொலை சம்பவம்
தொடர்பில் அம்பாறை தடயவியல் காவல்துறையினர் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாய்
உதவிகளுடன் சந்தேக நபர்கள் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

தமிழர் பகுதியில் பயங்கரம் - வீடொன்றில் குடும்பப் பெண் அடித்து கொடூரமாக கொலை | Woman Beaten To Death In Ampara

மேலும் சம்பவம் இடம்பெற்று வீட்டுக்கு வருகை தந்த கல்முனை நீதவான்
நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன்
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்காக அம்பாரை வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பான விரிவான
விசாரணைகளை பெரிய நீலாவணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

You may like this 

https://www.youtube.com/embed/qrURfXsHilQ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.