நுவரெலியாவில் (Nuwara Eliya) அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நுவரெலியா பேருந்து நிலையத்தினுள் ஒருவர் இறந்து கிடப்பதாக நுவரெலியா மாநகர சபை
ஊழியர் ஒருவர் காவல்துறைக்கு அறிவித்ததை அடுத்து இன்று காலை (17.10.2024) சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரும் அவருடன் இன்னுமொரு பெண்ணும் கடந்த 05 நாட்களுக்கு முன்பிலிருந்து நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் யாசகம் பெற்று வந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிக குளிர் காரணமாக உயிரிழந்திருக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை நுவரெலியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.