2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் மார்ச் மாதத்தில்
தேசிய மகளிர் வாரத்தை அறிவிக்கும் முன்மொழிவுக்கு இலங்கையின் அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 1977 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதியை சர்வதேச மகளிர்
தினமாக அறிவித்தது,
இதன்படி, அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியை
சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடி வருகின்றன.
அவளுடைய பலமே பாதை
இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம், அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான
சமத்துவம், அதிகாரமளித்தல் மற்றும் கண்ணியம் என்ற கருப்பொருளில்
கொண்டாடப்படுகிறது.
அதன்படி, முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில்,
இலங்கையில் நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை என்ற
கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை, தேசிய மகளிர் வாரம்
கொண்டாடப்படவுள்ளது.