கிழக்கு மாகாண ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 43 மில்லியன் செலவில் மூதூர் அரபா நகர்
பாலம் புதுப்பிப்பு பணிகளை ஆரம்பிக்க அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
கிழக்கு மாகாண
ஆளுநர் ஜயந்த லால் ரத்ன சேகர தலைமையில் (02) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புதுப்பிப்பு பணி
இந் நிகழ்வில் வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி
அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமசந்திரா,
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மிமண ,கிழக்கு மாகாண
உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

2024 நவம்பர் மாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த காலகட்டத்தில்
ஆளுநர், பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட பார்வையின்
அடிப்படையில் இப்பாலம் புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.





