யாழ்ப்பாணத்தின் (Jaffna) தொல்லியல் மரபுரிமை சின்னமான நல்லூரில் அமைந்துள்ள
மந்திரிமனையை பாதுகாப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் (16) முதல் குறித்த பராமரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று
வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் பெய்த மழை காரணமாக மந்திரிமனையானது பகுதியளவில் இடிந்து வீழ்ந்திருந்தது.
பாதுகாக்கும் பணிகள்
இதன் பாதுகாப்பு கருதி மந்திரிமனையின் சேதமடைந்ந வாயிற்புற கூரையை கழற்றி
மழைக்கால சேதத்தினை தடுப்பதற்கான வேலைகைகள் நடைபெற்று வருகின்றன.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மழை காரணமாக சேதமடைந்த மந்திரிமனையை நாாடளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், அமைச்சர்களான சந்திரசேகர், பிமல் ரத்நாயக்க மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.
அத்துடன் தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மந்திரிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




