முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணி முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான
கடலுக்குள் வெள்ளநீர் வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு
முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிலைமை

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தாழ் நிலங்களில் உள்ள வயல் நிலங்கள்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், படுவான்கரைப்பகுதிக்கு செல்லும் பிரதான
பாலத்தின் ஊடாகவும் வெள்ளநீர் பாயும் நிலைமை காணப்படுகின்றது.

கொக்கட்டிச்சோலை பகுதிக்கு செல்லும் மண்முனைப்பாலம், வவுணதீவு பிரதேசத்திற்கு
செல்லும் வளையிறவு பாலம் ஆகியவற்றின் ஊடாக வெள்ளநீர் பாயும் நிலைமை
காணப்பட்டது.

மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணி முன்னெடுப்பு | Work Drain Floodwaters Batticaloa Begins

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய
பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான வயல்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டிருந்த
நிலையில் இது தொடர்பில் விவசாய அமைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

விசேட கலந்துரையாடல்

இது தொடர்பில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட
கலந்துரையாடலை தொடர்ந்து நேற்று மாலை முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர்
வெளியேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டு அது தொடர்பான பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வந்தன.

மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணி முன்னெடுப்பு | Work Drain Floodwaters Batticaloa Begins

இந்த நிலையில் இன்றைய தினம் முழுமையாக முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர்
வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பார்வையிடுவதற்காக
பெருமளவான பொதுமக்கள் அப்பகுதிக்கு படையெடுப்பதை காணமுடிகின்றது.

முகத்துவாரத்தினை அண்மித்த பகுதிகளில் பெருமளவான கடற்தொழிலாளர்களும் மீன்பிடி
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் காணமுடிகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டும் செயற்பாட்டுக்கு பிரதேசத்தில்
உள்ள கடற்தொழிலாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணி முன்னெடுப்பு | Work Drain Floodwaters Batticaloa Begins

மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணி முன்னெடுப்பு | Work Drain Floodwaters Batticaloa Begins

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்