இஸ்ரேலில் (Israel) வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள இலங்கையர்கள் பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசா விதிமுறை மீறல் சம்பவம் காரணமாகவே இவர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ( Nimal Bandara) தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் கைது
இஸ்ரேல் நாட்டுக்கு விவசாயத்துறை வேலைவாய்ப்புக்கான வீசா பிரிவில் வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ள இலங்கையர் சிலர், தங்கள் பணியிடத்தில் இருந்து தப்பிச் சென்று ஹோட்டல் துறை வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து இஸ்ரேலிய அதிகாரிகளினால் சுமார் 17 பேரளவான இலங்கையர்கள் தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விரைவில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.