திருகோணமலை (Trincomalee) மாவட்ட பொலிஸ்
உத்தியோகத்தர்களுக்காக பாலின உணர்திறனை மேம்படுத்தல் என்ற தொனிப் பொருளில், செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை நகரில், தனியார் விடுதி ஒன்றில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
தடுக்க வேண்டிய அணுகுமுறைகள்
சட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பாலின அடிப்படையிலான வன்முறைக்கான அணுகல் சேவையை
மேம்படுத்துதல் மற்றும் அதற்கான ஆதரவு அமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான
உள்ளடக்கங்களை இந்த செயலமர்வு கொண்டிருந்தது.

குறித்த செயலமர்வில், மாவட்டத்தில் உள்ள, ஒன்பது பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த 31
பொலிஸ் உத்தியோகத்தர்களும், நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் கலந்து
கொண்டனர்.
இதன்போது பாலின சமத்துவம், பெண்களின் அதிகாரம்,
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி, சுகாதாரம், அரசியல், பொருளாதார
முடிவெடுக்கும் செயல்முறைகளில் சமஉரிமை,
பெண் சமத்துவம், பெண்கள் எதிர்நோக்கும் பாலின ரீதியான சம்பவங்கள் மற்றும் அதனை தடுக்க வேண்டிய அணுகுமுறைகள்
உட்பட பல விடயங்கள் வளவாளரால் தெளிவூட்டப்பட்டது.





