நாட்டிலுள்ள ஏராளமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பாதை மாறி செல்வதற்கு நாட்டில் தொழில் இன்மை என்பதே முக்கியமான காரணமென தமிழ்த் தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான பாஸ்கரன் கந்தையா (Bhaskaran Kantiya) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (25) வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தில் உலக தொழில் முனைவோர் தினம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அனைவரும் படிப்படியாக தொழில் சார்பில் உயர்ந்து வந்து தாயக தேசத்தின் அரசியலில் ஒரு வித்ததாக செயற்பட வேண்டும்.
தொழில் வளர்ச்சி
மேற்கத்தய நாடுகளிடம் ஒப்பிடும் போது எமது இனம் 50 வருடம் பின்னோக்கியுள்ளது.
எனவே நம் நாட்டில் ஒரு பாரிய தொழில் வளர்ச்சியை அனைவரும் உண்டாக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/1_m9RQ9_8OE?start=129