முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல்

சீனா (China) கட்டிய மிகப் பெரிய திட்டம் தான் த்ரீ கோர்ஜஸ் அணை  (Three Gorges Dam) பூமியின் சுழற்சியையே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய திட்டமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அணை, சீனாவின் துயம் என்று அழைக்கப்படும் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

குடாங்சியா, வுக்ஸியா மற்றும் ஜிலிங்க்ஸியா ஆகிய 3 பள்ளத்தாக்குகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்குடன் கடந்த 1994ம் ஆண்டு இந்த கோர்ஜஸ் அணையின் கட்டுமானம் ஆரம்பமானது.

கோர்ஜஸ் அணை

சுமார் 12 ஆண்டுகள் கட்டுமானம் நடந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டில் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தது.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் ஏற்பட்ட சுனாமியால் பூமியின் சுழற்சி எப்படிப் பாதிக்கப்பட்டது என்பது குறித்து நாசா ஆய்வு செய்தது.அப்போது தான் 2005இல் இந்த அணைக்குப் பூமியைச் சுழற்சியைப் பாதிக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக நாசா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், “பூமியின் நிறை எப்போதும் பரவலாக இருக்கும். ஒரே இடத்தில் பூமியின் நிறை அதிகரிக்கும் போது கிரகத்தின் நிலைத்தன்மை மற்றும் சுழற்சியில் அது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பூமியின் சுழற்சி

இதேபோல், டெக்டோனிக் தட்டுகளின் இயக்கம் காரணமாக ஏற்படும் நிலநடுக்கம் என்பது பூமியின் சுழற்சியைச் சிறிது பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

இதன் காரணமாக இது பூமியில் ஒரு நாளின் நீளத்தை 0.06 மைக்ரோ வினாடிகள் அதிகரிக்கிறது. மேலும், பூமியின் துருவ நிலையை சுமார் 2 சென்டிமீட்டர் அளவுக்கு நகர்த்துகிறது.

மிகப் பெரிய பூகம்பங்கள் பூமியின் சுழற்சியில் ஏற்படுத்தும் மாற்றத்துடன் ஒப்பிடும்போது இது பெரிது இல்லை.

நிலநடுக்கம்

ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நம்மால் தவிர்த்துவிட முடியாது” என்றார்

2004ல் ஏற்பட்ட நிலநடுக்கம், பூமியின் நிரையை பாதித்ததாகவும் இதனால் பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

மேலும், இதனால் பூமியில் ஒரு நாளின் நீளம் 2.68 மைக்ரோ விநாடிகள் குறைந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எப்படி நிலநடுக்கம் பூமியின் சுழற்சியைப் பாதித்ததோ அதேபோல நீர் ஒரே இடத்தில் அதிகளவு தேங்குவதும் பூமியின் சுழற்சியை மாற்றும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விண்வெளி விமான மையம்

இது குறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் புவி இயற்பியலாளர் டாக்டர் பெஞ்சமின் ஃபோங் சாவ் கூறுகையில், “சீனா கட்டியுள்ள இந்த ராட்சத அணையில் 40 கன கிலோமீட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும்.

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல் | World S Largest Dam Hydro Facility In China

பருவநிலை மாற்றம் காரணமாகவும் இந்த மாற்றம் நடக்கிறதாம். அதாவது பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு இரு துருவத்திலும் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது, வெப்ப மண்டல கடல்களின் எழுச்சி ஆகியவை கிரகத்தின் பூமத்திய ரேகையில் அதிக நிறை குவிக்கிறது.

இது பூமியின் சுழற்சியை மெதுவாக்கி ஒரு நாளின் நீளத்தைக் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.