முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலரான நெவில் வன்னியாராச்சி(Neville Wanniarachchi) மற்றும் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa ) ஆகியோர் நேற்று (16) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு பதிலாக அவர்களது வழக்கறிஞர்கள் வருகை தந்துள்ளனர்.
வெளிநாட்டு பயணத்தில் யோஷித ராஜபக்ச
யோஷித ராஜபக்ச தற்போது வெளிநாட்டு பயணமொன்றில் ஈடுபட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.
நெவில் வன்னியாராச்சி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் வருவதில் சிரமம் இருப்பதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பணமோசடிச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் விசாரணை
பணமோசடிச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.