முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது : வெளியான காரணம்

புதிய இணைப்பு

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் (Daisy Forrest) என்ற பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் முன்னிவைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ச (Yoshitha Rajapaksa) இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடக பேச்சாளர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்துள்ளார்.

முறையற்ற விதத்தில் சொத்து

பெலியத்த பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

YOU MAY LIKE THIS 

https://www.youtube.com/embed/9nKKCMNVbfohttps://www.youtube.com/embed/JjTltTK2D44https://www.youtube.com/embed/YVq7uT-LFTI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.