புத்தளம், பாலாவி – கற்பிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பாலாவி பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, ”பாலாவி ஊடாக கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது மோதியுள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
உயிழந்த பெண்ணின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்திலும், வைத்தியசாலையிலும் மரண விசாரணையை நடத்தினார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

