யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13
வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞர் இன்றையதினம் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உறவு முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான
நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
அந்தவகையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது
செய்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


