யாழில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும்
இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த இடம் இன்று (8) யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பொலிஸ்
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, வண்ணார்
பண்ணை சிவன் கோயிலுக்கு பின் வீதியான மானிப்பாய் வீதிக்கு அண்மித்த
ஒரு வீட்டில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த பொழுது
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்.போதை ஒழிப்பு பிரிவும்
இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, கஞ்சா கலந்த 4 கிலோ 250கிராம்
எடையுள்ள மாவா பாக்கு, 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள்
மற்றும் 24ரின் வாசனைத் திரவியம்
போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணையினை
யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
Source: https://tamilwin.com/article/youth-arrested-in-jaffna-1741441875

