கொழும்பில் துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜகிரிய பகுதியில் ரிவால்வர் ரக துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களுடன் 22 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஒபேசேகரபுர பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஆயுதம் மற்றும் போதைப்பொருடன் குறித்த இளைஞன் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை
சந்தேக நபரான கொழும்பு 15, முத்துவெல்ல மாவத்தை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.