அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று(03.04.2025) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் பெரியநீலாவணை பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 1 கிராம்
70 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், சந்தேக நபர் உட்பட
சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக
விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.