முல்லைத்தீவில் (Mullaitivu) கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை
மேற்கொண்டுவரும் வர்ணகுலசூரிய நெகித் ரவிஷ பிரனாந்து என்னும் 23 வயது இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
முல்லைத்தீவு கொக்கிளாய் காவல் பிரிவிற்குட்பட்ட கொக்குளாய் கடலிற்கு சென்ற போதே அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடு பதிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (27.08.2025) இரவு கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்றுவரை (28) கரைக்கு
திரும்பவில்லை.

இந்தநிலையில் இன்றையதினம் (28) கொக்குளாய் காவல் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
நடுகடல் பகுதி
குறித்த இளைஞன் மீன்பிடிக்கச் சென்ற படகு நங்கூரமிட்டபடி நடுகடல்
பகுதியில் இன்று (28) காலை தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இளைஞர் குறித்து எந்த தகவலும் தெரியவராததுடன் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் தேடியும் இளைஞர் கிடைக்கவில்லை என உறவினர்கள்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





