இந்தியாவுக்கு எதிரான முதலாவது ரி 20 போட்டியில் சிம்பாப்வே வெற்றி பெற்றதுடன் வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது.
இரண்டு அணிகளுக்குமிடையேயான முதலாவது ரி 20 போட்டி இன்று(06) நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை எடுத்தது.
116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியை 102 ஓட்டங்களுக்குள் சுருட்டிய சிம்பாப்வே அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மாபெரும் சாதனை
மேலும் ரி 20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வென்ற அணியாக சிம்பாப்வே மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 127 ஓட்டங்கள் கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனையாகும். தற்போது சிம்பாப்வே அதனை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது.