தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழந்துள்ளது.
இந்தோனேசியாவில்(Indonesia) இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக கிடைத்த கோனி ஒராங்குட்டான் தம்பதிக்கு 2009 ஆம் ஆண்டு இந்த ஒராங்குட்டான் குரங்கு பிறந்தது.
உயிரிழப்பு
அண்மையில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஒராங்குட்டான் குரங்கு நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளது.
இறக்கும் போது இதற்கு சுமார் 15 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த ஒராங்குட்டான் குரங்கின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.