முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிங்கப்பூர் வைத்தியசாலையில் ஷிரந்தி ராஜபக்‌ஷ! விமான நிலையத்தில் அழைப்பாணை வழங்கப்பட்டதா?

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ, அங்குள்ள பிரபல ‘மவுண்ட் எலிசபெத்’ வைத்தியசாலையில் வைத்தியப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

‘சிரிலிய சவிய’ அறக்கட்டளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக இந்த அறிவித்தல் கடிதம் தங்கல்லையில் அமைந்துள்ள ‘கார்ல்டன் ஹவுஸ்’ இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு விரைந்து சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு புறப்படும் நுழைவாயில் அருகே வைத்து அவரிடம் குறித்த அறிவித்தல் தொடர்பான கடிதம் வழங்கப்பட்டதாகவும், அதனை அவரது உறவினர் ஒருவர் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்‌ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்புவார் எனவும், திட்டமிட்டபடி செப்டம்பர் 24ஆம் திகதி நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி ‘சிரிலிய சவிய’ நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பார் எனவும் ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரா படுகொலை வழக்கில் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் சிங்கப்பூரிலுள்ள ‘மவுண்ட் எலிசபெத்’ வைத்தியசாலையில் நீண்ட காலம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்காலகட்டத்தில், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிப்பதற்காக வைத்தியசாலை அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், ஷிரந்தி ராஜபக்‌ஷவின் தற்போதைய வைத்தியசாலை அனுமதி மற்றும் சிகிச்சை தொடர்பான மேலதிக விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Source: https://samugammedia.com/chiranthi-rajapaksa-at-a-singapore-hospital-was-a-red-carpet-provided-at-the-airport-1789639423

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.