“முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின்
அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
1311 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், 1314 சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 31 பேர் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.

மறுவாழ்வு நிலையங்கள்
மேலும், 8 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடமிருந்து, 863 கிராம் 137 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 202
கிராம் 247 மில்லிகிராம் ஐஸ், 1 கிராம் 42 மில்லிகிராம் கொக்கெய்ன், 197
கிலோகிராம் 298 கிராம் 971 மில்லிகிராம் கஞ்சா, 50,823 கஞ்சா செடிகள், 6
கிராம் 72 மில்லிகிராம் குஷ்ரக போதைப்பொருள், 20 கிராம் 783 மில்லி கிராம்
ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1415 போதை மாத்திரைகள் மற்றும் 993 கிராம் 748
மில்லிகிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

