கம்பஹா, பியகம ஆரம்ப பாடசாலையின் நான்காம் வகுப்பில் பயிலும் 14 மாணவர்களுக்கு நேற்று மதியம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சொறிவு காரணமாக பியகம அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
08 ஆண் மாணவர்களும் 06 பெண் மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்பன் பேனா
இந்த வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவர் பாடசாலைக்கு கொண்டு வந்த கார்பன் பேனாவால் சிறுவர்களின் உடலில் கோடுகளை வரைந்துள்ளார்.
அவர்கள் கோடுகளை தண்ணீரில் கழுவிய பின்னர் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பியகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.