ஐபிஎல்(ipl) பிரிமியர் போட்டியில்14 வயதான ராஜஸ்தான்(rajasthan royals) வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார்.
38 பந்துகளில் 101 ஓட்டங்கள்
இடது கை வீரuான இவர் ஏழு பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை விளாசி, இறுதியில் 38 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த உதவினார்.
கடந்த மாதம் 14 வயதை எட்டிய சூரியவன்ஷி, கடந்த ஆண்டு 1.1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் கையெழுத்திட்டார், ஐபிஎல்லில் இடம்பெற்ற இளைய வீரர் ஆனார்.