யாழ்ப்பாணம்- நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமாகிய நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதுகுறித்து விசாரணைகள்
மேற்கொள்ளப்பட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குறித்த சிறுமியை பல தடவைகள் தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

