முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு

இலங்கைக்கு விடுமுறையில் வருகை தந்திருந்த போது உயிரிழந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளுக்கான பிரேத பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இறப்புகளுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, உயிரிழந்த 24 வயதான பிரித்தானிய யுவதியின் தாயும்
சகோதரியும் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடலை எடுத்துச் செல்ல இலங்கை
வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

2025 பெப்ரவரி முதலாம் திகதியன்று கொழும்பில் உள்ள மிராக்கிள் சிட்டி
விடுதியில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, 24
வயதான பிரித்தானிய் நாட்டைச் சேர்ந்த எபோனி மெக்கின்டோசி மற்றும் 26 வயதான ஜேர்மன் சுற்றுலாப் பயணி நாடின் ரகுஸ் ஆகியோர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு | 2 Foreign Womens Die In Sri Lanka Court Order

எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையின்போது, மரணத்துக்கான சரியான காரணங்களை கண்டறியாத நிலையில்,
சட்ட மருத்துவ அதிகாரி, பகிரங்க தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைக்காக
உடல்களின் பாகங்கள் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, எபோனி மெக்கின்டோசின் உடல் அவரது தாயாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இறப்புகளுக்கு காரணம்

இதற்கிடையில், நாடின் ரகுஸின் உடல், அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டபடி,
ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அத்தோடு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு ஜேர்மனிய நாட்டுக்காரர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று
வருகிறார்.

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு | 2 Foreign Womens Die In Sri Lanka Court Order

இந்த சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்கு முன்னர், குறித்த விருந்தகத்தின் அறை
ஒன்றில் மூட்டை பூச்சிகளுக்காக புகைபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த புகைப்பிடிப்பா? இறப்புகளுக்கு காரணம் என்பது
உறுதிப்படுத்தப்படவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.