2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை, இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனான வியாகர்ணன் பிரவீன் என்ற மாணவரே இவ்வாறு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) சற்று முன்னர் வெளியாகின.
முதல் முறை
இதில் இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
மாணவனான வியாகர்ணன் பிரவீன் மாவட்ட ரீதியாக முதலிடத்தை பெற்றுள்ளார்.
அத்தோடு, அகில இலங்கை ரீதியாக 97வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஏ சித்தியையும், தொழில்
நுட்பத்திற்கான விஞ்ஞானத்தில் ஏ சித்தியையும், இயந்திரவியல் தொழில்நுட்பத்தில்
பி சித்தியையும் பெற்று சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.