நாமும் எமது அப்பாவைப்போல் பொதுமக்களுக்கு சிறந்த வைத்திய சேவையை வழங்குவோம் என க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (G.C.E A/L Exam) யாழ் மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களைப் பெற்ற இரட்டை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்
அத்துடன் எதிர்காலத்தில் வைத்தியத்துறையில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என ஜமுனானந்தா பிரணவன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இருதய வைத்திய நிபுணராக வரவேண்டும் என்பது தனது இலக்கு என ஜமுனானந்தா சரவணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களான குறித்த சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றதுடன் தேசிய ரீதியில் மூன்றாம், ஐந்தாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
குறித்த மாணவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/T4CbXjy4WSA?start=7