முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு

இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பத்து இலட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடலட்டைகள் இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்திய மதிப்பில் பத்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை
பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறையினர் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த
ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு | 250 Kg Sea Cucumbers Seized In Ramanathapuram

இராமநாதபுரம் – சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இலங்கைக்கு
கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல்

இதையடுத்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு (04) கியூ பிரிவு காவல்துறையினர்
அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு | 250 Kg Sea Cucumbers Seized In Ramanathapuram

இதன்போது நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை
செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கடல் அட்டை

இதனை கண்ட கியூ பிரிவு காவல்துறையினர், கடல் அட்டைகளை பதப்படுத்திய கும்பலை மடக்கி
பிடிப்பதற்காக சுற்றி வளைத்த நிலையில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர்
மட்டும் பிடிபட்ட நிலையில் அங்கிருந்த மூவர் தப்பிச் சென்றுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இந்தியாவில் பதுக்கிய இலட்சம் மதிப்பிலான கடலட்டைகள் மீட்பு | 250 Kg Sea Cucumbers Seized In Ramanathapuram

இந்தநிலையில் அவரிடம் நடத்திய விசாரணைகளின் போது, தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை
தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே
உள்ள குடோனில் பதப்படுத்தி பின்கடல் வழியாக இலங்கைக்கு கடத்த
திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இராமநாதபுரம் புறநகர் பகுதியில் கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த
முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்