முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர்!

குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும்
சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நேற்று (15) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கருத்து தெரிவித்துள்ளார்.

சுற்றிவளைப்பு

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தொடங்கப்பட்டன.

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர்! | 30 000 People Caught In The Police Cordon

இந்த சுற்றிவளைப்புகளின் போது 197 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றில் தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளும் அடங்குகின்றன.

இதற்கிடையில், இந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 7, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சம்பவங்களாகும்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பேர் காயமடைந்தனர்.

கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 920 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 14,000 பேரும், போதைப்பொருள் குற்றங்களுக்காக 16,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர்! | 30 000 People Caught In The Police Cordon

அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்திய 11,757 பேருக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் சோதனைகளின் போது, 14 கிலோ கிராம் ஹெராயின், 20 கிலோ கிராம் ஹஷிஷ், 33 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 1,123 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.