யாழ்ப்பாணத்தில் (Jaffna) சட்டவிரோதமான முறையில்
மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் ரக வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ – 32 வீதியூடாக சென்ற குறித்த வாகனங்களை சாவகச்சேரிப்
பொலிஸார் கைப்பற்றியிருப்பதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம்
அனுமதிப்பத்திரம் பெற்ற மணலை மேற்பரப்பில் பரப்பி அதன் கீழாக வெள்ளை மணலை கடத்திச் சென்ற டிப்பர்
வாகனங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.