யாழ்ப்பாணம் (Jaffna)- குருநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20) யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில், குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 108 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும்
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.